ஆபாச மெசேஜ்.. தொடர்ந்து மிரட்டல் ; கணவர் மீது போலீஸில் சின்னத்திரை நடிகை பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
21 June 2023, 1:07 pm

சின்னத்திரை நடிகை ஒருவர், பிரிந்து வாழும் தனது கணவர் மிரட்டுவதாக மாங்காடு மகளிர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

ரட்சிதா இன்று மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தான் தினேசை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் இன்று தினேசை விசாரணைக்கு அழைத்த நிலையில், போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரட்சிதாவிற்கு வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்றார். இந்த புகார் தொடர்பாக ரட்சிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக சின்னத்திரை நடிகை ரட்சிதா அளித்த புகாரால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!