பாலிவுட்டுக்கு செல்லும் பிரபல தமிழ் நடிகர்? இந்தி படத்தில் டாப் இயக்குநருடன் கைக்கோர்க்க பேச்சுவார்த்தை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 10:32 am

கோலிவுட் நடிகர்கள் சமீப காலமாகவே பிற மொழி நேரடி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சூர்யா நேரடி ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சூர்யா தற்போது தன்னுடைய ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பாலா இயக்கி வரும் ’வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம் அனைவரும் எதிர்பாக்க கூடிய படங்களில் ஒன்று, இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா, ஞானவேல், மற்றும் சுதா கொங்காரா ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை கவனித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் இயக்கும் அடுத்த இந்தி படத்தில் நேரடியாக சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வ இருதரப்பும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 648

    0

    0