சாதி, மதம் பார்க்கல.. எங்க காதலுக்கு ஓகே சொல்லிட்டாங்க : பிரிந்து சென்ற காதலியை திருமணம் செய்த பிரபல யூடியூபர் மதன் கௌரி ஓபன் டாக்!!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2022, 5:49 pm
தமிழகத்தல் பல யூடியூப் சேனல்ககள் உள்ளது. எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் சில சேனல்கள் மட்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம் பிடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் மதன் கௌரி.
பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களை தாண்டி மதன் கௌரி தனது சேனலை வெற்றிகரமாக நடத்தி கொண்டு வருகிறார். யாரும் அறியாத தகவல்களை எடுத்துக்கூறி சுவாரஸ்யமாக கொண்டு சென்று மக்கள் மனதில் இடம்பிடித்தார். உள்நாடு மற்றும் வெளிநாடுகள் பற்றிய தகவலை விரிவாக கூறி வருவார்.

தற்போது அவர் திருமணம் செய்துள்ளார். பிரிந்து சென்ற காதலியை மீண்டும் கரம் பிடித்துள்ளார். இந்த சேனல் காதல் தோல்வியில் இருந்த போது உருவாக்கப்பட்டது என அவர் அடிக்கடி கூறி வருவார். தற்பேது நீண்ட நாள் காதலியான நித்யாவை கரம் பிடித்துள்ளார்.

திருமண செய்தி குறித்து தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த மதன் கௌரி, திருமணத்திற்கு பின் ஓபனாக பேசியுள்ளார். அதில் எனது திருமண செய்தியை வீட்டில் தெரிவிக்கும் போது எப்படி பதற்றமாக இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது, மதுரையில் நான் படிக்கும் போது, அதே பள்ளியில் நித்யா படித்தார். நித்யாவை பற்றி என் நண்பர் கூறுவார்கள்.

நேரில் நான் நித்யாவிடம் பேசியதில்லை, முகநூலில் பேசினோம், நண்பர்களானோம் பின்னர் இரண்டு பேரும் நட்பாக பழகினோம், பள்ளிக்கலாம் முடிந்தும் இருவருடைய நட்பு தொடர்ந்தது. பின்னர் இது காதல் என புரிந்தது. தற்போது அந்த பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாவில், சமூக வலைதளங்கள் மூலம் காதலர்களாக பழகி பின்னர் பிரிந்துவிட்டோம். தற்போது மீண்டும் சேர்ந்திருக்கிறோம். 11 வருடங்கள் ஆகின்றன. நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவங்களாக இருந்தாலும் எங்க வீட்டில் எதிர்ப்பு சொல்லாமல் எங்க காதலை ஏற்றுக்கொண்டார்கள்.
என் பெற்றோர் மாதிரியே எல்லாரும் சாதி, மதம் பார்க்காம காதலர்களை ஏத்துக்க வேண்டும என குறிப்பிட்டுள்ளார். தற்போது இவர்கள் திருமணம் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்களில் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது.