மத்திய அரசின் வேளாண் சட்டத்தை விட கொடுமையானது…. தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 4:48 pm
Quick Share

இயற்கை இடர்பாடு பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 25ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்க வேண்டும் என மன்னாா்குடியில் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது :- தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பேரழிவு பெரு மழையால் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. வேளாண்மை அடியோடு அழிந்து இருக்கிறது. குறிப்பாக, பல்வேறு கிராமங்கள் இன்னும் தமிழ்நாட்டோடு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அரசு இயந்திரம் இன்னும் உள்ளே நுழையவில்லை. பல கிராமங்களில் ஊடகங்களை தவிர, அரசு இயந்திரம் இதுவரை உள்ளே நுழையாதது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மிகப்பெரிய அளவில் தொழில்நுட்பங்கள் படகு, போக்குவரத்து, ராணுவம் உட்பட பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதை தவிர, ஆனால் இதுவரை பயனளிக்கவில்லை என்பதை ஊடக செய்திகள் நாளுக்கு நாள் வெளிப்படுத்தி வருகிறது. இது குறித்து முதலமைச்சர் உரிய தெளிவுபடுத்தவேண்டும். விரைந்து நிவாரண பணியை தொடங்க வேண்டும்.

தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசின் துணையோடு, சம பங்களிப்போடு நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு உரிய நிதி ஆதாரங்களை வழங்குவதோடு, நிவாரண பணிகளை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளை இணைந்து செயலாற்ற வேண்டும். அரசியல் பார்வையோடு தற்போது விமர்சனங்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பது மட்டும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு செய்கின்ற நன்றாக அமையும் என்பதை உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும். பாதிக்கப்பட்டிருக்கிற விளைநிலங்களுக்கு உற்பத்தி செலவை கணக்கீட்டு இழப்பிட்டு தொகையை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இயற்கை இடர்பாடு பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 25ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்க வேண்டும். உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களுக்கான சிறுதானிய வகைகளுக்கான செலவினை கணக்கிட்டு உரிய இழப்பீடுகளை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அதனை விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தவேண்டும்.

காப்பீடு செய்திருக்கிற விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தருவதற்கான உத்தரவாதத்தை தமிழக முதலமைச்சர் வழங்க வேண்டும். தேசிய அளவில் சமிக்தா கிஷான் மோட்சா என்கிற அமைப்பு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை உலகமே வியந்து பார்க்கிற போராட்டத்தை அடிபணிந்து மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றது.

இன்றைக்கு தமிழ்நாட்டில் அதைவிட கொடுமையான தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம் விளைநிலங்களையும், நீர் ஆதாரங்களையும், ஆறுகளையும், ஏரிகளையும் அபகரிக்க மோசமான நடவடிக்கையில் களமிறங்கி இருக்கிறது. இதனால், சென்னையில் அதனை சுற்றி இருக்கிற பகுதியில் பெரும் மழை நீரால் கூட ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட சக வெள்ளநீர் பேரழிவை சந்தித்து வருகிறது. தமிழ்நாடு சட்டம், தமிழ்நாடு நில சட்டம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இதனை எதிர்த்து போராடுகிற விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு கொடுமைப்படுத்துகிறார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் விரோத சட்டத்தை விட கொடுமையானது. அதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீதும் இந்தியாவை பாஜக ஆளுகிற எந்த ஒரு மாநிலத்திலும் எந்த விவசாயியின் மீதும் குண்டர் சட்டம் போடவில்லை. இதனால், மேல் காட், சிப்காட் முறையில் அடிமைப்படுத்துகிறது, கொடுமைப் படுத்தி வருகிறது.

இந்த நிலையில், எஸ்.கே.எம் அமைப்பு தமிழ்நாடு போன்ற ஒரு சில மாநிலங்களில் அரசியல் பார்வையோடு செயல்படுவதால், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை விட திமுக ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து போராடுவதற்கு கூட தேசிய அளவிலான தலைவர்களை போராடுவதற்கு வாய்ப்பில்லாமல் தொடர்வதால், தமிழ்நாட்டில் அரசியல் சார்பற்ற இயற்கை அமைப்பை உருவாக்கி நாளை 2021 வலிமைப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் காலை 10 மணி அளவில் சென்னை நிருபர்கள் சங்க கூட்ட அரங்கில் அதற்கான கூட்டம் நடைபெற இருக்கிறது. ஏராளமான வட இந்திய தலைவர்களும், தேசிய அளவிலான தலைவர்களும், விவசாயிகளும் சேர்ந்த முன்னணி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர், என தெரிவித்தார்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 522

    0

    0