விழுப்புரம்: நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே அண்ராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது நிலம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் நிலம் உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், சின்னராஜ் தனது நிலத்தில் இருந்த சவுக்கு கன்றுகளை பிடுங்கி எறிந்தது குறித்து முருகனிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் சின்னராஜை தடியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சின்னராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் சின்னராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சின்னராஜ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் முருகனை உடனே கைது செய்யக்கோரியும் சின்னராஜ் உறவினர்கள் திரு வெண்ணெய்நல்லூர்- திருக் கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…
This website uses cookies.