ரயிலில் இருந்து கழன்ற பிரேக் ஷூ.. விவசாயி உயிரிழப்பு!

Author: Hariharasudhan
26 October 2024, 6:55 pm

ராமநாதபுரத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு. 61 வயதான இவர், இன்று காலை 7.35 மணியளவில் தனது கிராமத்தில் விவசாயப் பணிக்காக ரயில் தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்து உள்ளார்.

அப்போது அந்த வழியே ராமநாதபுரம் – மதுரை செல்லும் பயணிகள் ரயில் வேகமாக சென்று உள்ளது. அப்போது அதில் இருந்து, இரும்பு பிரேக் ஷூ ஒன்று கழன்று சண்முகவேலின் முகத்தில் பலமாக அடித்து உள்ளது.

TRAIN

இதில் பலத்த காயமடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் ரயில்வே போலீசார், உயிரிழந்த சண்முகவேல் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: லாரிக்கு அடியில் புகுந்த கார் : கண்ணிமைக்கும் நேரத்தில் கோரம் : நொடியில் பலியான 6 பேர்!

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், இந்தச் சம்பவத்தால் ரயிலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், ரயில் நிற்காமல் சென்றுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!