திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை முயற்சி ; விவசாய கடன் கொடுக்காததால் விரக்தி..!!!

Author: Babu Lakshmanan
12 October 2022, 4:28 pm

திருவாரூர் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் கொடுக்காததால் விவசாயி திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் விவசாயம் செய்வதற்காக கச்சனம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று, விவசாய கடன் கேட்டுள்ளார்.

அங்கு உள்ள அதிகாரிகள் விவசாய கடன் கொடுக்க மறுத்ததால் விவசாயி மன வருத்தத்தில் அருகே உள்ள செல்போன் டவரில் கையில் திமுக கொடியுடன் ஏரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மேலும் தகவல் அறிந்து வந்த ஆலிவலம் காவல்துறையினர் அவரை கீழே அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி