‘அசிங்கப்பட்டு உயிரை வச்சிக்கனும் அவசியமில்ல’…. மாட்டை பிடித்துச் சென்ற கடன்காரர்கள் ; வீடியோ வெளியிட்டு விவசாயி தற்கொலை…!!

Author: Babu Lakshmanan
6 November 2023, 12:09 pm

பழனி அருகே விவசாயியின் மாடுகளை கடன் கொடுத்தவர் திரும்ப எடுத்துச் சென்றதால் மனம் உடைந்த விவசாயி விஷம் அருந்தி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ருக்வார்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் மகள் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் அப்பனூத்து பகுதியில் விவசாய தோட்டத்தை பிரகாஷ் என்பவரிடமிருந்து குத்தகைக்கு பிடித்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், தோட்டத்திற்கு அருகில் கௌதம், வஞ்சிமுத்து என்கின்ற பால் விற்பனையாளரிடம் 1 லட்சம் ருபாய் கடன் பெற்று நான்கு மாடுகளை வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார் . சில நாட்களாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து மாடுகளை பழனிச்சாமியில் தாய், தந்தையரிடம் கொண்டு சென்று விட்டார். வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை என்றும், கௌதம் மாடுகளை திரும்ப பிடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மணமடைந்த பழனிச்சாமி விவசாயி விஷம் அருந்திக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘எனக்கு மானம் போகும் முன் உயிருடன் இருக்க வேண்டியது இல்லை,’ என்று கூறி விட்டு விசம் அருந்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.

https://player.vimeo.com/video/881567290?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அருகே வாங்கிய மாட்டின் கடனை அடைக்க முடியாமல் விவசாயி ஒருவர் விஷமருந்தி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 528

    0

    0