‘எங்ககிட்ட கருத்து கூட கேட்கல’…கூடுதல் நிலத்தை கையகப்படுத்த முயற்சி பண்றாங்க: மின்துறை மீது விவசாயிகள் சங்கத்தினர் புகார்..!!

Author: Rajesh
21 March 2022, 12:11 pm

கோவை: விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் கூடுதல் நிலத்தை மின்துறை கையகப்படுத்துவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை: விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும் நஷ்ட ஈடு தராமலும் மின் கோபுரம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த மின்சாரத்துறை முயற்சித்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில், ஆனைமலை சுற்றுவட்டாரம் மற்றும் அங்கலக்குறிச்சி பகுதிகளில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரத்திற்கு இதுவரை மின்சாரத்துறை விவசாயிகளுக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்கவில்லை.

இதனிடையே கூடுதலாக 22 மீட்டர் அளவு விவசாய நிலத்தை கையகப்படுத்த மின்சாரத்துறை முயற்சித்து வருகிறது. விவசாய நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும், இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நஷ்ட ஈடு தராமலும் மின்சார துறை அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

இதே போல் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாசன சபை தேர்தல் நடந்தது. தற்போது இந்த தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முந்தைய உறுப்பினர்கள் பட்டியலை வைத்துக்கொண்டு தற்போது தேர்தல் நடத்துவது நியாயமாகாது. எனவே இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…