தொடர் கனமழையால் குளம் போல காட்சியளிக்கும் வயல்வெளி.. தண்ணீரில் வாடும் பயிர்கள்… கண்ணீர் விடும் விவசாயிகள் ..!!

Author: Babu Lakshmanan
2 November 2022, 7:05 pm

திருவள்ளூர் : பொன்னேரி அருகே இரண்டு நாட்கள் விடாத பெய்த கன மழையால்
500க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதன் விளைவாக பல கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன.

Farmland - updatenews360

குறிப்பாக, மேட்டுப்பாளையம், இலவம்பேடு, ஆவூர், மெதூர், கங்கானிமேடு ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக, ஆவூர் பகுதியில் தண்ணீர் செல்வதற்கு சரியான வழித்தடம் இல்லாததால் சுமார் மூன்று அடி தண்ணீரில் நெற்கதிர்கள் மூழ்கி காட்சியளிக்கின்றன.

Farmland - updatenews360

அதேபோன்று, கங்கானிமேடு பகுதியில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பார்ப்பதற்கு குளம் போல் காட்சி அளிக்கும் இந்த இடத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் வேதனை அடைந்துள்ளனர்.

Farmland - updatenews360
  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 441

    0

    0