திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பாக உண்ணாவிரதம் : இபிஎஸ் தலைமையில் கோவையில் தொடங்கியது போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 11:07 am

கோவையில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து உண்ணாவிர போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.

கோவையை புறக்கணிக்கும் திமுகவின் அலட்சியப் போக்கை கிடைக்கும் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, சாலை சீரமைக்காதது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், செ.ம.வேலுச்சாமி, நத்தம் விஸ்வநாதன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!