தமிழகம்

மகளின் தற்கொலைக்கு காரணமானவரை தேடிப் பிடித்து கழுத்தறுத்த தந்தை, அண்ணன்.. கோவையில் பட்டப்பகலில் கொடூரம்!

கோவையில், மகளின் சாவுக்கு காரணமான நபரை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் தமிழ்ச்செல்வம் (25). இவர் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவருடைய அம்மாவின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கொல்லக்கொண்டான் கிராமம் ஆகும்.

மேலும், தமிழ்ச்செல்வம் ராஜபாளையம் அருகே உள்ள தனது தாயின் ஊருக்கு அடிக்கடி சென்று வந்து உள்ளார். அப்படி சென்று வந்த போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்து உள்ளனர்.

மேலும், இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தனர். இவ்வாறாக 3 வருடமாக இருவரும் காதலித்து வந்து இருக்கின்றனர். அப்போது, ஆனந்தி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தமிழ்ச்செல்வத்திடம் கூறியுள்ளார். ஆனால் தமிழ்ச்செல்வம், வேறு சில பெண்களிடமும் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சில காரணங்களால் திருமண பேச்சை தள்ளி வைத்துக் கொண்டே வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்ச்செல்வத்திற்கு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்து வந்த விவகாரம் ஆனந்திக்கு தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆனந்தி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு ஆனந்தி உயிரிழக்க தமிழ்ச்செல்வம் தான் காரணம் என அவரது தந்தை மலைக்கனி, அண்ணன் ராஜாராம் ஆகியோருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வந்துள்ளது.

இதன்படி, தமிழ்ச்செல்வத்தைக் கொல்வதற்கு திட்டம் தீட்டிய தந்தையும், மகனும் கத்தியையும் வாங்கி வைத்து உள்ளனர். பின்னர் மகளின் காதலன் எங்கே இருக்கிறார் எனத் தேடி வந்தனர். அப்போது தமிழ்ச்செல்வம், கோவை, துடியலூரில் உள்ள மருத்துவமனையில் பணியில் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் தந்தை, மகன் இருவரும் ராஜபாளையத்தில் இருந்து பைக்கில் புறப்பட்டனர். தொடர்ந்து, துடியலூர் சென்றதும் தமிழ்ச்செல்வத்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அவரிடம் எங்கு இருக்கிறாய்? என்று கேட்டதற்கு மருத்துவமனையில் இருப்பதாக கூறியுள்ளார்.

பின்னர், உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும், மருத்துவமனையில் இருந்து வெளியே வர முடியுமா எனக் கேட்டுள்ளனர், அதற்கு சரி வருகிறேன் என தமிழ்ச்செல்வன் வெளியே வந்துள்ளார். தொடர்ந்து, அவரை மருத்துவமனையில் இருந்து சற்று தள்ளி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு 2 பேரும் அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, பின்னர், இருவரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வத்தின் வயிறு, மார்பு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் தமிழ்ச்செல்வம் அலறி துடித்தபடி கீழே சாய்ந்தார்.

இதையும் படிங்க: திருமணமான இளம்பெண்ணை அடிக்கடி ரகசியமாக சந்தித்த இளைஞர்.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்!

பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனிடையே, அந்த வழியாக வந்த சிலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த தமிழ்ச் செல்வத்தை மீட்டு, அவர் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து வந்த துடியலூர் போலீசார், தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்த போலீசார், அவர்களின் பைக் பதிவு எண்ணைக் கொண்டு, திருப்பூருக்கு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. உடனே திருப்பூர் போலீசார் உதவியுடன் பைக்கில் தப்பிச்சென்ற இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

15 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

15 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

16 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

16 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

17 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

17 hours ago

This website uses cookies.