விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தந்தை – மகன் : காரை நிறுத்தி மருத்துவமனை அழைத்து சென்ற நகராட்சி தலைவர்!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 5:59 pm

பொள்ளாச்சி தாமரைகுளத்தை சேர்ந்தவர் கனகவேல் (40) தனது இரு மகன்களுடன் தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சென்று விட்டு ஊருக்கு வர திரும்பிய போது கோவில்பாளையம் அருகே சாலை தடுப்பில் எதிர்பார விதமாக பைக் மோதியது.

இதில் தரணீஸ் (13) தரணீந்திரன் (8) ஆகியோர் காயமடைந்தனர். அவ்வழியாக வந்த கோவை சென்று விட்டு பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா உடனடியாக தனது அரசு வாகனத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மருத்துவர்களிடம் நன்றாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கு கூறி மேல் சிகிச்சைக்கு கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்,நகராட்சித் தலைவர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ட சம்பவம் மனிதநேயத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 270

    0

    0