மகள் என்று தெரிந்தும் மது போதையில்… தந்தை செய்த கொடூரம்!
Author: Udayachandran RadhaKrishnan21 January 2025, 6:20 pm
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் இவரது மனைவி இன்பத்தாய் இருவருக்கும் திருமணம் முடிந்து ஆண், ஒன்றும் பெண் ஒன்றும் உள்ளது.
இதையும் படியுங்க: ‘அரசியலுக்காக குழப்பத்தை ஏற்படுத்தும் விஜய்’.. தமிழிசை கேள்வி!
இந்த நிலையில், தனது மகளான 15 வயது சிறுமிக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தந்தை சார்லஸ் மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்..
இந்த நிலையில் காவல் ஆய்வாளர் கோகிலா பாலியல் தொல்லை அளித்த சார்லஸ் என்பவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தை தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..