2 குழந்தைகளை கால்வாயில் தள்ளிவிட்ட தந்தை.. அழுத சிறுவன்.. நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Author: Hariharasudhan
19 March 2025, 12:04 pm

ஆந்திராவில், தனது 2 குழந்தைகளைக் கால்வாயில் தள்ளிவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: ஆந்திர மாநிலம், கோனசீமா மாவட்டம் நெலபர்த்திபாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கஜபதி நகரில் பில்லி ராஜூ – விஜயா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ராம் சந்தீப் (10) என்ற மகனும், காருண்யா (7) என்ற மகளும் இருந்தனர். இதில், ராஜூ, பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.

மேலும், ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தீப் 4ஆம் வகுப்பும், காருண்யா 1ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 17) ராஜு வழக்கம் போல் குழந்தைகளை வென்டூரில் உள்ள தனது வீட்டிலிருந்து ராமச்சந்திரபுரம் பள்ளிக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், மதியம் பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வரும்போது குழந்தைகளைக் கால்வாயில் தள்ளிவிட்டு, ராஜுவும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் மகன் சந்தீப் மட்டும், நீந்திக் கரையை அடைந்து அழுதுகொண்டே வெளியில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த கிராமத்தினர், சிறுவனிடம் விசாரித்துள்ளனர்.

Drown in Pond

அப்போது, அவர்களிடம் சந்தீப் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கால்வாயில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அன்று மாலை 6 மணியளவில் காருண்யாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: தூக்கம் தொலைத்த செந்தில் பாலாஜி.. மூத்த அமைச்சர் வழியில் டெல்லி விசிட்.. பரபரக்கும் களம்!

மேலும், ராஜுவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் வெங்கடநாராயணா தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ராஜூ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • Ana Ana Padiye viral song டிரெண்டிங் ஆன ‘அண்ணன பாத்தியா’ பாடல்..ரீல்ஸ் எடுத்து வைப் செய்யும் பிரபலங்கள்.!
  • Leave a Reply