காதல் மனைவியின் கதையை முடித்த டாக்டர்? நீடிக்கும் மர்மம் : கதறும் பெண்ணின் குடும்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2025, 10:55 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த மருத்துவர் இளம்தென்றல். இவர் மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்ராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சேலம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் கடலரசியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர் வேலூர் அடுக்கும் பாறை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்து சமீபத்தில் சில மாதங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இதையும் படியுங்க: ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்கும் திமுக.. யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

இந்த நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில மாதங்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்து வந்த மருத்துவர்களின் வாழ்க்கையில் மருத்துவர் இளந்தென்றலின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரியின் வரதட்சனை கொடுமையால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது

மேலும் மனைவி கடலரசியை வேறொரு பகுதியில் வாடகை வீட்டில் விட்டு விட்டு மருத்துவரான கணவர் இளந்தென்றல் தினமும் வீட்டிற்கு செல்லாமல் வாரத்திற்கு ஓரிரு தினங்கள் சென்று வந்ததாகவும் அப்படி செல்லும்போது மது போதையில் மட்டுமே சென்று மனைவி கடலரிசியிடம் இளம் தென்றல் தகராறு செய்து வந்ததாகவும் விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது

மேலும் விவாகரத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து கணவரை பார்க்க வந்த மணைவி கடலரிசி திடீரென விஷம் அருந்தியதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடலரசியின் பெற்றோருக்கு இளந்தென்றல் தகவல் அளித்துள்ளார்

தகவல் அறிந்து வந்த கடலரசியின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடலரிசி சிகிச்சைக்காக அவரது கணவர் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் இதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கும் நிலையில் இதுகுறித்து உயிரிழந்த மருத்துவ மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் கடலரசியின் தந்தை புகார் ஒன்றை கொடுத்தார்

Doctor Killed By his Husband

மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரும் ஆளும் கட்சி பிரமுகமான இளம் தென்றல் மீது புகார் அளித்து இரண்டு நாட்கள் ஆகியும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் இளம் தென்றல் மருத்துவருக்கு சாதமாக செயல்பட்டு வருவதாகவும் வரதட்சணை கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்கள் மீது வீண்பழி செலுத்துகிறார் என்று கூறி கண்ணீர் மல்க உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தை மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளான நிலையில் சாவில் சந்தேகம் இருப்பதாக பெண் மருத்துவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Doctor Wife killed by his Doctor Husband

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் மருத்துவரை அவரது கணவரும் மருத்துவருமான இளம் தென்றல் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஆலங்குடியின் ஆதரவோடு வரதட்சணை கொடுமை செய்து அவரது தற்கொலைக்கு காரணமான நிலையில் தலைமறைவான அரசு மருத்துவரை கைது செய்வதில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாகவும் உயிரிழந்த கடலரிசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!