குழந்தைகளை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த தந்தை : மனதை பதை பதைக்க வைக்கும் சம்பவம்!!
Author: Sudha30 July 2024, 4:40 pm
தஞ்சை மாவட்டம் கன்னித் தோப்பு பகுதியில் செல்வம் என்ற இளைஞர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் மற்றும் 1 ஆண் பிள்ளை என மொத்தம் 3 குழந்தைகள்.அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி சிறுவன்.
இந்த நிலையில் இவரது குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிப்பு வேலை நடைப்பெற்று வருகிறது வேலை முடிவுற்று வரும் நிலையில் பாதி குழிகள் மூடி மீதமுள்ள குழிகள் மூடப்படாமல் இருந்ததால் செல்வத்தின் குழந்தைகள் குழிகளில் விழுந்து அடிபடும் நிலை ஏற்பட்டது.
பல முறை ஊராட்சி மன்ற தலைவியிடம் சொல்லியும் நடைவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.எனவே செல்வம் தனது பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் அசம்பாவிதம் ஏற்ப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரே இறங்கி குழிகளை அடைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவரது வீட்டிற்கு செல்லும் மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த கம்பியை செல்வம் பிடித்ததாலும் குழிகளில் தண்ணீர் இருந்த காரணத்தாலும் மின்சாரம் பாய்ந்தது தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
அருகே வசிக்கும் பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர் அங்கே வந்த மருத்துவக் குழு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
உறவினர்கள் அவர் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.