தமிழகம்

நடுவீட்டில் 3 நாட்களாக வைத்த தந்தையின் சடலம்.. ஊரே வெறுத்த சகோதரர்களின் நிலத்தகராறு!

தெலுங்கானாவில், சொத்துப் பிரச்னையால் 3 நாட்களாக இறுதிச் சடங்கு செய்யாமல் வீட்டிலேயே தந்தையின் சடலம் வைக்கப்பட்டது கிராமத்தினரிடையே வெறுப்பை உண்டாக்கி உள்ளது.

யதாத்ரி: தெலுங்கானா மாநிலம், யதாத்ரி மாவட்டம், மோட்குரு மண்டலம் சதர்சபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலய்யா – லிங்கம்மா தம்பதி. இவர்களுக்கு நரேஷ் மற்றும் சுரேஷ் என்ற இரு மகன்களும், ஷோபா மற்றும் சோனி என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லிங்கம்மாவும், அவரது மூத்த சகோதரர் ராமுலுவும் சேர்ந்து சூர்யாபேட்டை மாவட்டம், திருமலகிரி மண்டலம், தட்டிப்பமுலா கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். இதில் அவர்கள் இருவர் சேர்ந்து அரை ஏக்கர் நிலத்தை விற்று உள்ளனர். மேலும், மீதமுள்ள நிலத்தில் ராமுலு, தங்கை லிங்கம்மா மற்றும் தனது மகள் லிங்கம்மா மூத்த மருமகள் (மூத்த மகன் நரேஷ் மனைவி அருணா) பெயரில் எழுதி பட்டா செய்து கொடுத்தார்.

இதனால் அந்த நிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என இளைய மகன் சுரேஷ் வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், பாலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு இறந்து உள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்துள்ளனர்.

ஆனால், இறுதிச் சடங்கு செய்ய வேண்டுமென்றால் சொத்தைப் பிரித்து தர வேண்டும் என சகோதரர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதனால் தந்தையின் உடல் 3 நாட்களாக இறுதிச் சடங்குகள் செய்யாமல் ஐஸ் பாக்ஸில் வைக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பு சகோதரர்கள் இருவரும் இறந்த தந்தை பாலையாவை வாகனத்தில் அழைத்துச் சென்று, தந்தை பெயரில் இருந்த 12 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயரில் பிரித்து பதிவு செய்தனர். இப்போது ஒரு ஏக்கர் நிலத்திற்காக இரண்டு மகன்களும் மீண்டும் சண்டையிட்டுக் கொண்டதும் ஊர் மத்தியில் பரபரப்பானது.

இதனிடையே, கணவரின் மரணத்தால் துக்கமடைந்த லிங்கம்மா, மகன்கள் சண்டையால் என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று நாட்களாக கணவரின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதார். தகனம் முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என உறவினர்கள் கூறினாலும், அதனை ஏற்க இருவரும் மறுத்துள்ளனர்.

ஆனால், ஊர் பெரியவர்கள் இறந்த உடலை இறுதிச் சடங்கு செய்யாமல் ஊரில் வைத்திருந்தால் அது ஊருக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நல்லதல்ல எனக்கூறியும் கேட்கவில்லை. இதனால் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் 3 நாட்களாக அங்கே தங்கி இருந்து உள்ளனர்.

இதையும் படிங்க: EMI ஏஜெண்ட் முன்பே பைக்கை தீ வைத்து எரித்த இளைஞர்.. காரணம் என்ன?

பின்னர், இந்த விவகாரம் போலீசாருக்குத் தெரிய வந்ததையடுத்து, ராமண்ணாப்பேட்டை எஸ்ஐ வெங்கடேஷ்வர்லு, மோட்கூர் எஸ்ஐ நாகராஜு சனிக்கிழமை கிராமத்துக்குச் சென்று மோதல் ஏற்படாமல் இருக்க ஏற்பாடு செய்தனர். பின்னர், இரு மகன்கள் மற்றும் மருமகள்களிடம் பேசி இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும், இல்லையெனில் பஞ்சாயத்து ஊழியர்களைக் கொண்டு போலீசாரே இறுதிச் சடங்கு நடத்துவோம் என எச்சரித்தனர்.

இதனையடுத்து, லிங்கம்மாவின் மூத்த மருமகள் பெயரில் ராமுலு எழுதிக் கொடுத்த ஒரு ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஊர் பெரியவர்களிடம் போலீசார் பேசி, ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்த பின்னர் பிரச்னை முடிந்தது. இறுதியாக நேற்று காலை இறுதிச் சடங்கு நடைபெற்றது.

Hariharasudhan R

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

11 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

12 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

12 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

13 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

13 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

14 hours ago

This website uses cookies.