மருமகனை சரமாரியாக வெட்டிய மாமனார் : பேருந்து நிலையத்தில் பரபரப்பு… வீதிக்கு வந்த குடும்ப சண்டை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 2:06 pm

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கவுரிசெட்டிபட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (37). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில் செல்வம் தனது மனைவி சித்ராவை விவாகரத்து செய்யக்கோரி கடந்த ஓராண்டுக்கு முன்பு கோர்ட்டில் மனு செய்தார். இதற்கிடையே செல்வம் தனது மனைவியின் சொந்த ஊரான பிக்கம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றார்.

அப்போது அங்கு வந்த அவருடைய மனைவி சித்ரா, மாமனார் பழனி (59), மாமியார் சின்ன பொண்ணு, மனைவியின் அக்காள் ராஜேஸ்வரி ஆகியோர் அவரிடம் தகராறு செய்தனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பழனி, மருமகன் செல்வத்தை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த செல்வம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி, சித்ரா, சின்ன பொண்ணு, ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த தகராறில் ராஜேஸ்வரியின் மகள் அகிலாவை தாக்கியதாக செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…
  • Close menu