மதுரையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய திருமணம்…’மொத்த மொய்ப்பணமும் இவங்களுக்கு தான்’: முன்மாதிரியான பெண்ணின் தந்தை…!!

Author: Rajesh
16 March 2022, 6:09 pm

மதுரை: மகளின் திருமணத்துக்கு வந்த மொய்ப் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து தந்தை ஒருவர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகில் உள்ள கற்பக விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் கும்பா ரங்காராவ் – சுமதி தம்பதியினர். இவர்களுடைய மகள் அம்ரீதாவின் திருமணம் இன்று மதுரை பாலரெங்காபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் திருமணம் நடைபெற்றது.

மதுரையைச் சேர்ந்த ஆத்மராவ் மகள் அம்ரிதாவுக்கும் திருச்சியைச் சேர்ந்த பாலகுமாருக்கும் இன்று காலை திருமணம் சிறப்பாக நடந்தது. இத்திருமணத்திற்காக இவர்கள் கொடுத்த அழைப்பிதழில், ‘அன்புடையீர், கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வழங்கும் மொய்ப்பணம், அன்பு இல்லத்தின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது உறவினர், நண்பர்களை ஆச்சரியப்படுத்தியது.

மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மணமகளின் தந்தை ஆத்மராவ் கூறுகையில், “நாம வாழ்ந்த வாழ்க்கையில பெரிய அளவில் யாருக்கும் உதவி பண்ண வாய்ப்பு அமையல. அதான், என் மகள் திருமணத்துக்கு வர்ற மொய்ப்பணத்தை அப்படியே ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுக்கனும்னு முடிவு பண்ணேன்’ என பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1385

    3

    0