பெற்ற மகளையே பலாத்காரம் செய்து நண்பனுக்கு பகிர்ந்த தந்தை : 8 மாத கருவை சுமக்கும் கொடுமை… போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2022, 12:13 pm

விழுப்புரம் : பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே வி.சாத்தனூரை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த சூழலில் அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் இதுபற்றி சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூறிய தகவலை கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அந்த சிறுமியை அவரது தந்தை கோவிந்தன் (வயது 44) மற்றும் அவரது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த கந்தகோணி என்கிற முனுசாமி (வயது 48) ஆகிய இருவரும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோவிந்தன், கந்தகோணி என்கிற முனுசாமி ஆகிய இருவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Vaadivaasal Tamil movie வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!
  • Views: - 1062

    0

    0