கோவை ரயில் நிலைய சந்திப்பு வெளியே, ரயில் பெட்டியை ஹோட்டல் போல் வடிவமைத்து உள்ளனர். இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கியுள்ளார்.
கடை விளம்பரத்திற்காக, நேற்று பிற்பகல் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஐம்பதாயிரம் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, ரயில் நிலைய சந்திப்பு சாலையில் நிறுத்தியதால், அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாதாரணமாக ஹோட்டலில் கொடுக்கப்படும் ஒரு பிரியாணி அளவை போல், மூன்று மடங்கு இருந்ததாகவும், இதனால் அதிகம் உட்கொள்ள முடியவில்லை என போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
குடும்பத்தின் ஏழ்மையான சூழலை போக்குவதற்காக, போட்டியில் பங்கேற்று ஒரு லட்சம் பணத்தை வெல்லலாம் என்ற ஆர்வத்தில் வந்த போட்டியாளர் ஒருவர், 6 பிரியாணியை அரை மணி நேரத்தில் உண்ண முடியாமல் வருத்தத்துடன் வெளியேறினார்.
அதே போல 15 வயது ஆட்டிசம் குறைபாடுள்ள மகனின் சிகிச்சைக்காக பிரியாணி போட்டியில் பங்கேற்ற தந்தை, தனது மகனின் நிலை குறித்து உருக்கமாக பேசினார். கோவை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கணேச மூர்த்தி என்பவரும் பங்கேற்றார். இவர் தனது மகனின் மருத்துவ செலவுக்காக இந்த போட்டியில் பங்கேற்றார். இவர் பிரியாணி சாப்பிடும்போது கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர், ‛‛நான் கால்டாக்சி டிரைவராக இருக்கிறேன். என் பையனுக்காக இந்த போட்டியில் பங்கேற்றுள்ளேன். என் மகனுக்கு 15 வயது ஆகிறது. அவன் ஆட்டிசம் குழந்தையாக இருக்கிறான். அவனை வீட்டில் வைத்து பார்க்க முடியவில்லை.
பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் ரூ.19 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறினார்கள். இதற்காக தான் நான் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளேன். என் மகன் என் வீட்டில் படுக்காமல் அடுத்தவர் வீட்டில் போய் படுக்கிறான். கை கால் எல்லாம் நல்லா இருக்கிறது. அவனுக்கான வேலையை அவனால் செய்ய முடியாது. நானும், எனது மனைவியும் தான் அவனை கவனித்து வருகிறோம்.
என் மனைவி அதிகம் கஷ்டப்படுகிறார். என் மனைவி மடத்துக்கு பள்ளியில் ஆயாவாக வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் 7 ம் வகுப்பு படிக்கிறார். நாங்கள் வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். எங்கள் மகனுக்கு யாராவது உதவி செய்ய வேண்டும்” என்று கண்கலங்கினார். இந்நிலையில் தான் போட்டியின் முடிவில் 4 பிரியாணி சாப்பிட்ட கணேச மூர்த்தி 2ம் இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கிடையே கணேசமூர்த்தி கண்கலங்கியபடி ஆட்டிசம் பாதித்த மகனுக்காக போட்டியில் திக்கி திணறி கண்ணீர் மல்க பிரியாணி சாப்பிடுவதும், அதன்பிறகு மகிழ்ச்சியாக ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையை வாங்கும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.