ஓபிஎஸ் – இபிஎஸ் பிளவால் பாஜக, திமுகவுக்கு சாதகமான சூழல்… சசிகலா அதைப்பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லை : கே.சி.பழனிசாமி பளார்!!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2022, 1:28 pm
ஓபிஎஸ் இபிஎஸ் பிளவால் பாஜக மற்றும் திமுகவுக்கு சாதகமான சூழல் அமையும் வாய்ப்புள்ளதாக கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் கே.சி பழனிச்சாமி தலைமையில் அஇஅதிமுக எதிர்கால தொண்டர்களின் உரிமை பாதுகாத்திட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒற்றை தலைமை லஞ்ச ஊழல், சாதி மத அப்பாற்பட்ட அதிமுக புரட்சித்தலைவி எம்ஜிஆர் அவர்களின் எழுதிய உயிலின்படி அவரது தொண்டர்களால் அதிமுக வழி நடத்திட வேண்டும், ஒருங்கிணைந்த அதிமுக உருவாக்க வாருங்கள் என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் எம்.பியும் எம்.எல். ஏ.வுமான கே.சி. பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி.யும் எம்எல்ஏ.வுமான கே.சி பழனிச்சாமி கூறுகையில், அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிளவினால் அதிமுக தொண்டர்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர்.
அதிமுக உட்கட்சி பிளவின் காரணமாக மதவாத சக்திகள் தற்பொழுது அதிமுக கையில் கொண்டு வருகின்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்று பின்னர் கூட்டணி கட்சியில் அதிமுகவுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே வழங்க நிலைமை ஏற்படும்.
இதனை தடுக்கும் விதத்தில் எம்ஜிஆர் வழியில் லஞ்ச லாபம் இல்லாத உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் முறையாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் தற்பொழுது இபிஎஸ், ஓபிஎஸ் ஒற்றைத் தலைமைக்காக போட்டி போட்டுக் கொண்டு இருப்பது வேதனை அளிப்பதாக கூறினார்,.
தொடர்ந்து இபிஎஸ் பொதுச் செயலாளராகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இருந்து வந்த நிலையில் தற்பொழுது வழக்குகளில் போட்டி போடுவது மட்டுமே குற்றத்திலிருந்து தப்பிக்க இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் ஆக இருந்தாலும் இபிஎஸ் ஆக இருந்தாலும் சசிகலாவாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் தொண்டர்கள் வழியில் தொண்டர்கள் செல்வாக்கைப் பெற்று பொதுச் செயலாளராக ஆகலாம் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் பேசியவர் அதிமுக உட் கட்சியில் ஓபிஎஸ் இபிஎஸ் ஜாதி பார்வை, லஞ்சம், ஊழல் செய்யும் நபர்களுக்கு சீட்டு வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என குற்றம் சாட்டினார்.
ஓபிஎஸ், இபிஎஸ் பிளவு பட்டதால் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுக கட்சிக்கும் சாதகமாக அமைய சூழல் உருவாக்கியுள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா ஆகியோர்கள் மூலம் உருவாக்கப்பட்ட அதிமுக தற்பொழுது அதிமுக சின்னம்,கொடி முடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் ஜெயிலுக்கு போய் குற்றம் சாட்டப்பட்டவரான சசிகலா ஒற்றை தலைமை ஏற்க வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு அவருக்கு அந்த தகுதி இல்லை அதை உண்மையான தொண்டர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.