லஞ்ச ஒழிப்பு ரெய்டுக்கு பயந்து ஆர்டிஓ அலுவலக மாடியில் இருந்து குதித்த புரோக்கர் : விசாரணையில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 11:21 am

வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – போலீசாரை பார்த்து பயந்து தப்பிப்பதற்காக தரகர் ஒருவர் எட்டி குதித்ததில் காலில் பலத்த அடி.

கோவை துடியலூர் சேரன் காலனியில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஓழிப்புத் துறை போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அலுவலக மெயின் கேட் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பூட்டப்பட்டு சோதனை நடைபெற்றது. அலுவலகத்தில் இருந்த யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவிடவில்லை.

அந்த அலுவலகத்தில் ஆர்.டி.ஓ சிவகுருநாதன் உட்பட போக்குவரத்து அலுவலர்கள், தரகர்கள் உள்ளிட்டவர்கள் உள்ளே இருந்ததாக தெரிகிறது.

அதில் பழனிச்சாமி என்கிற தரகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தப்பித்துக் கொள்வதற்காக மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்திற்குள் 8 தரகர்கள் இருந்ததாக தெரிகிறது.
அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறையினர் இது குறித்து அறிக்கை வெளியிட்ட பின்பே எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, யார் யார் கைது செய்யப்படுகிறார்கள், என்பது குறித்து தெரியவரும்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…