சென்னை : மத்திய அரசு பேராசிரியருக்கு மயக்க மருந்து கொடுத்து , இளம் பெண்ணோடு ஒன்றாக இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டிய 3 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) வயது ( 59 ). இவர் மத்திய அரசுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் மூலமாக ராதா (வயது 40) என்பவர் அறிமுகமாகியுள்ளார். ராதா சுய தொழில் தொடங்க கடனாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுக சிறுக 10 லட்சம் ரூபாய் வரை சந்திரனிடம் பெற்றுள்ளார்.
நீண்ட நாட்களாகியும் பணம் தராத காரணத்தினால் சந்திரன் கடந்த 2019 ஆம் ஆண்டு ராதா மீது வழக்கு தொடர்ந்து தற்போது அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் அந்த வழக்கில் சரியான முறையில் ராதா ஆஜராகாத காரணத்தினால் சமீபத்தில் ராதாவிற்கு நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா சமீபத்தில் சந்திரனை தொலைபேசியில் அழைத்து பணத்தைத் தந்து விடுவதாகவும் மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
அதன் பேரில் கடந்த 19ம் தேதி கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் முதல் தெரு பகுதியில் உள்ள ராதாவின் நண்பரான புஷ்பா (வயது 49) என்பவரது வீட்டிற்கு சந்திரனை வர வைத்தள்ளார். அங்கு சந்திரன் வந்தவுடன் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கியவுடன் சந்திரனுடன் லட்சுமி (வயது 30) என்ற பெண்ணுடன் ஒன்றாக இருப்பது போன்று போட்டோ மற்றும் வீடியோவை எடுத்துள்ளனர்.
இதற்கு லட்சுமியின் கணவர் முருகன் என்பவரும் துணையாக இருந்துள்ளார். சந்திரன் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் இனி பணம் கேட்டால் நீ லட்சுமியுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு விடுவோம் எனக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரன் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொடுங்கையூர் போலீசார் கோயம்பேடு ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த ராதா , விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா பகுதியைச் சேர்ந்த லட்சுமி அவரது கணவர் முருகன் மற்றும் கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புஷ்பா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
அவரிகளிடமிருந்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.