போதைக்கு அடிமையாக்கி பள்ளி மாணவியை நாசமாக்கிய கொடூரர்கள்: உடந்தையாக இருந்த 3 மாணவிகள்…வெளியான ‘திடுக்’ தகவல்கள்..!!

Author: Rajesh
2 March 2022, 4:26 pm

சென்னை: பானிபூரி சாப்பிட சென்ற பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 கல்லூரி மாணவிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை பள்ளி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த தனியார் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் வசந்த் கிரிஷ் என்பவர் காதலிப்பதாக கூறி ஊக்கா போதை பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதோடு இல்லாமல் தனது நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ் குமார்(22), கல்லூரி மாணவன் விஷால்(19), தனியார் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரசன்னா(32) ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளியில் இருந்து மாணவி சோர்வமுடன் திரும்புவதை கவனித்த பெற்றோர், இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் படி போலீசார் பள்ளி மாணவியை ஹூக்கா போதை பொருள் கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த பல் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவன் வசந்த் கிரிஷ், அவரது நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ் குமார்(22), கல்லூரி மாணவன் விஷால்(19), தனியார் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரசன்னா(32) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. அதில், பள்ளி மாணவியின் காதலனான பல்மருத்துவ கல்லூரி மாணவன் வசந்த் கிரிஷின் நண்பரான கல்லூரி மாணவன் விஷால் அதே பள்ளியில் படித்து வரும் மாணவியை காதலித்து வந்துள்ளார். அவர் மூலம் தான் பள்ளி மாணவியை பானி பூரி கடைக்கு அழைத்து வந்து வசந்த் கிரிசுடன் பழக ஏற்பாடு செய்துள்ளார்.

அதோடு இல்லாமல் விஷால் தன்னுடன் படித்து வரும் 2 கல்லூரி மாணவிகளுக்கும் இந்த பாலியல் கூட்டு பலாத்காரத்தில் நேரடி தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. விஷாலுக்கு போதை பழக்கம் இருப்பதால் தனது சக கல்லூரி மாணவிகளும் அடிக்கடி போதை பொருள் உட்கொண்டு தனது நண்பரான வசந்த் கிரிஷ் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

அழகாக இருந்த பள்ளி மாணவியை 3 மாணவிகள் சேர்ந்து தங்களுடன் ஹூக்கா போதை பொருட் உட்கொள்ள கட்டாயப்படுத்தி போதைக்கு அடிமையாக்கியுள்ளனர். அதன் பிறகே வசந்த் கிரிஷ் மற்றும் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 1 மாதங்களாக கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

இதுதவிர பள்ளி மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருவரும் தனித்தனியாக திருமணம் செய்து வசித்து வருகின்றனர். பள்ளி மாணவி தற்போது தனது பாட்டியின் கட்டுப்பாட்டில் வசித்து வருகிறார். இதை இவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு இரவில் பள்ளி மாணவியின் பாட்டி தூங்கிய பிறகு அவரை சக பள்ளி மாணவி மூலம் அழைத்து வந்து இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்து பிறகு அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் விட்டு விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி சீரழித்த மற்றொரு பள்ளி மாணவி, 2 கல்லூரி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள், துணை நடிகர், பேராசிரியர் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் படி 3 பள்ளி, கல்லூரி மாணவிகளையும் வழக்கில் சேர்க்க போலீசார் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த 3 கல்லூரி மாணவிகளும் தற்போது தலைமறைவாக உள்ளனர். இதனால் அவர்களை கைதுசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கேட்பதற்கவோ, கண்டிக்கவோ ஆள் இல்லை என்ற தைரியத்தில் பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி சீரழிக்க கல்லூரி மாணவிகள் உடனிருந்த சம்பவம் பெற்றோர்கள் மத்திய பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Tamil cinema actresses 2025 2025-ல் கோலிவுட்டை கலக்க போகும் இளம் நடிகைகள்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 1511

    0

    0