பெண் காவலருக்கு ஆபாச வார்த்தையால் அர்ச்சணை : கும்பல் செய்த அட்டகாசம்.. பூட்டு போட்ட போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 11:59 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கீதா (42 ) இவர் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்

இதனிடையே இவர் சிரூடையில் இல்லாமல் அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள துணிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருந்த போது மேல்கொத்தகுப்பம் புதுமனையை சேர்ந்த சத்தியமூர்த்தி( 40) இவரது தம்பி குணசேகரன் (36) பிரபாகரன் (36) தினகரன் (36 )ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அங்கு போலீஸ் ஏட்டு கீதாவிடம் வேண்டுமென்றே தகராறு செய்துள்ளனர்

மேலும் தகாத வார்த்தை பேசி அவரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டு கீதா புகார் அளித்தார்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீசார் சத்தியமூர்த்தி, குணசேகரன், பிரபாகரன், தினகரன், ஆகிய நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு குடியாத்தம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மேல்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ