ஆம்புலன்ஸ் வாகனத்தை கயிறு கட்டி இழுத்த பெண் தூய்மை பணியாளர்கள் : வெளியான சர்ச்சை வீடியோ.. சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2022, 4:54 pm

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நின்றிருந்த பழைய ஆம்புலன்ஸ் வாகனத்தை தனியார் பெண் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் நத்தம் சாலையில் உள்ள ஒடுக்கம் பகுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் புதிய வார்டுகள் கட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மருத்துவ மனையில் இருந்த பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.

ஜனவரி மாதம் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த பழைய வாகனங்கள் தற்பொழுது திண்டுக்கல் பழைய நீதிமன்றத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நின்றிருந்த பழைய ஆம்புலன்ஸ் வாகனத்தை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஆண், பெண் தூய்மை பணியாளர்களைக் கொண்டு கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்.

ஆம்புலன்ஸ் வாகனத்தை முன்புறம் 30க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் இழுக்க வாகனத்தின் பின்புறம் ஆண் பணியாளர்கள் அதை தள்ளிக்கொண்டு ” ஏய் இழூ ஏய் தள்ளு” என ஆரவாரம் செய்து கொண்டு சுமார் அரை கிலோ மீட்டர் இழுத்து வந்த சம்பவம் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில் சி அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.

வாகனத்தை இழுத்துச் செல்வதற்கு என்றே ரெக்கவரி வாகனங்கள் உள்ளன. அதை பயன்படுத்தி இழுத்துச் செல்லாமல் நண்பகல் வேளையில் குறிப்பாக பெண் பணியாளர்களை கொண்டு பழைய ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையில் இழுத்து செல்ல வைத்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 415

    0

    0