லெஸ்பியனில் விருப்பம்.. பள்ளி மாணவிக்கு ‘டார்ச்சர்’ கொடுத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2024, 11:39 am
தனியார் பள்ளி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியையின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் சௌமியா. இவர் அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: மண்ணுக்குள் புதைந்த ஆசிரியை… ஒரு மணி நேரம் நடந்த போராட்டம் : மண்சரிவால் விபரீதம்!
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல் துறையினர் சமூக அறிவியல் ஆசிரியை சௌமியா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.