பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் டிஜிபிக்கு சிறை தண்டனை அறிவித்த சில நிமிடங்களில் ஜாமீன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2023, 2:20 pm

கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ராஜேஷ்தாஸ் சிறப்பு டிஜிபியாக பணி புரிந்துவந்தார். அவர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி புகார் தெரிவித்தார். மேலும், புகார் அளிக்கச் செல்லும் ராஜேஷ் தாஸின் வலியுறுத்தலின்பேரில் செங்கல்பட்டில் எஸ்.பியாக இருந்த கண்ணன் என்னைத் தடுத்தார் என்று புகார் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்த வழக்கு, விழுப்புரத்திலுள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. புகாரையடுத்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னள் எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் 138 முறை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அரசு தரப்பு சாட்சிகளான 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருவர் மீதும் 400 பக்க குற்றப்பத்திரிக்கையை விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி இன்று தீர்ப்பை வாசித்தார்.

முன்னதாக குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இருவரும் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜேஷ்தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. ராஜேஷ் தாஸுக்கு உடந்தையாக இருந்த கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பின்னர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு ஜாமின் வழங்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

30 நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி நீதிபதி புஷ்பராணி உத்தரவு.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!