வேகமெடுக்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னையில் கனமழை.. பாதை மாறுமா?

Author: Hariharasudhan
30 November 2024, 9:53 am

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனையடுத்து, இந்தப் புயலால் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே, குறிப்பாக காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று (நவ.30) கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் 21 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

TN Rain

அதேபோல், இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலையில் (OMR Salai) பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், நேற்று இரவு முதல் சென்னை முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: காலிங் பெல் அடித்ததும் காணாமல் போன தாலிச்செயின்.. தனியாக இருப்பவர்களே உஷார்!

அதேநேரம், சென்னை புறநகர் ரயில் சேவை வழக்கம்போல் இயங்கி வருகிறது. அதேநேரம், பிற்பகல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மாலை வேளையில் கடக்கும் என்றும், மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் எனவும் கூறப்படுகிறது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 140

    0

    0