அண்ணனுக்கு காய்ச்சல்… தங்கைக்கு கொரோனா : இரண்டாவது முறையாக தொற்றால் அவதிப்படும் கனிமொழி…!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 10:42 am

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 686 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக,சென்னையில் மட்டும் 294 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில்,திமுக மகளிரணி செயலாளரும்,எம்.பி.யுமான கனிமொழி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக,கடந்த 2021 ஆம் ஆண்டு எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்,தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்றும், இன்றும் முதல்வர் கலந்துகொள்ள இருந்த ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர்,ந லமாக தான் உள்ளதாகவும்,பணிகளை தொடர ஆயத்தமாகவுள்ளதாகவும் திமுக தலைவரும்,முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் அவர்கள்,கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில்: பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை, நான் நலமாக உள்ளேன். எனவே, இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் அரசு பணிகளை தொடர ஆயத்தமாக உள்ளேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!