டாஸ்மாக்கில் மது அருந்தும் போது தகராறு… திமுக கவுன்சிலர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… 4 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 7:50 pm

தஞ்சை அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறின் போது திமுக கவுன்சிலர் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் கிருபானந்தம் என்பவர் அப்பகுதியில் திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் தனது நண்பர் அப்பு என்பவருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு கவுன்சிலர் கிருபானந்தத்திற்கும், அங்கிருந்த சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறு முற்றிய நிலையில், கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்பு ஆகிய இருவரையும், வாக்குவாத்தில் ஈடுபட்ட எதிர் தரப்பினர் அரிவாளால் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். காயமடைந்தவர்களை அருகே இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்புவை அரிவாளால் வெட்டிய திருவையாறு பகுதியைச் சேர்ந்த துளசிராமன், நடேசன், அருண், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட வாய்த்தகராறில் திமுக கவுன்சிலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 282

    0

    0