தாக்கலாகும் மத்திய பட்ஜெட்… நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கோரிக்கைளை வைத்த முதலமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 July 2024, 1:16 pm

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடப்பு நிதியாண்டுக்கான (2024-2025) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில்,* மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்பட வேண்டும்.

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும். * பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரெயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!