நடிகை கஸ்தூரியை கைது பண்ணுங்க… குவியும் புகார் ; திணறும் போலீசார்.!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2024, 1:55 pm

தெலுங்கு சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகிறது.

நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கூறி தமிழ்நாடு நாயுடு மகா ஜனசபை மற்றும் தமிழக நாயுடு சங்கம் என பல்வேறு அமைப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

தொடர்ந்து கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற பட்சத்தில் வருகின்ற நவ., 10ஆம் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?