சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் கட்டு கட்டாக பணம்… ரெய்டில் சிக்கிய ரூ.200 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் : வருவாயை மறைத்தது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 4:26 pm

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

மேலும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது.

40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • Ilayaraja Symphony நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!