12 பேரை காவு வாங்கிய ‘குணா குகை’யில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு : சிக்கலில் படக்குழுவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2023, 5:06 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வன துறைக்கு சொந்தமான சுற்றுலா தளங்கள் உள்ளது குறிப்பாக மோயர் பாய்ன்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில் பல்வேறு சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கமலஹாசன் நடித்த குணா திரைப்படம் மூலம் பிரபலமடைந்த குணா குகை அதற்கு முன் பேய்களின் சமையலறை என்று இருந்தது. அதற்கு பின் குணா குகை சுற்றுலா பயணிகளிடையே மிக முக்கியத்துவம் பெற்றது.

இதுவரை சுமார் 12 பேருக்கு மேல் இந்த குகைக்குள் சென்று இறந்துள்ளனர். இதையடுத்து குணா குகை சுற்றிலும் வனத்துறையினர் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவிலிருந்து சினிமா எடுப்பதற்காக வந்த படக்குழுவினர் வனத்துறையின் அனுமதி பெற்று ஒருமாதம் குணா குகை, பைன் பாரஸ்ட் போன்ற இடங்களில் படம் பிடித்தனர்.

ஆனால் படகுழுவினர் அனுமதி முடிந்ததும் குணா குகைக்குள் படம் பிடித்துள்ளனர். மதுரையை சேர்ந்த ரமேஷ் என்ற வழக்குரைஞர், தலைமை வன பாதுகாவலர் அவர்களுக்கு மனு அளித்துள்ளார்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, வனத்துறை அனுமதி பெறாமல் சினிமா எடுக்கப்பட்டது, மரங்களை வெட்டியது, மேலும் குணா குகை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே படம் எடுக்க வேண்டும் மற்றும் வனப்பகுதியில் படக்குழுவினருக்கு கேஸ் சிலிண்டர் வைத்து சமைத்துளனர் என்று மனு அளித்துள்ள நிலையில் இன்று குணா குகையில் முதன்மை உதவி வன பாதுகாவலர் திபேசெஸ்ஜனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இது குறித்து அனுமதியின்றி சினிமா எடுக்க அனுமதி வழங்கிய வனசரகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 734

    0

    0