PTR-க்கு டைம் எப்படி இருக்கு..? பழனி முருகன் கோவிலில் அடுத்தடுத்து தடங்கல் ; ஆதரவாளர்கள் அப்செட்..!!

Author: Babu Lakshmanan
8 May 2023, 1:45 pm

பழனி முருகன் கோவிலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கால் இடறிய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வருகை தந்தார். ரோப் கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்ற அவர், ரோப்காரில் இருந்து சுமார் 20 படிக்கட்டிகள் ஏறி சென்று உச்சியை அடைந்தபோது, கால்மிதி மேட் தடுக்கியதில் கால் இடறி தடுமாறினார்.

பிறகு, சுதாரித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார். பின்னர், ஆனந்த விநாயகரை கும்பிட்டு விட்டு மூலவரை தரிசிக்க ரக்கால பூஜையில் கலந்து கொள்ள உள்ளே சென்றார்.

இந்த நிலையில் சமீப காலமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் நிதி அமைச்சர் பேசிய ஆடியோ ஒன்றை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. நிதி அமைச்சர் பழனி கோவிலுக்கு வரும் போதேல்லாம் தடங்கல் ஏற்பட்டு வருகிறது. கடந்த முறை பழனி கோவிலுக்கு நிதி அமைச்சர் வருகை தந்த போது திடீரென மின்சாரம் தடை பட்டு ரோப்காரில் அந்தரத்தில் சிறிது நிமிடங்கள் தொங்கினார்.

தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் அமைச்சரவை மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், நிதி அமைச்சர் முதல்வரை நேரில் சந்தித்து ஆடியோ குறித்த விளக்கம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது.

மேலும் தீவிர முருக பக்தர் ஆன நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பழனி கோவிலில் தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டு வருகிறது.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!