ஆப்ரேஷன் தியேட்டரில் கிட்டார்.. பெங்களூரு மருத்துவமனையில் அதிசயம்

Author: Hariharasudhan
18 November 2024, 1:30 pm

மூளை – விரல் நரம்பு இடையிலான சிக்கலான அறுவை சிகிச்சையை கிட்டார் மூலம் சுலபமாக முடித்துள்ளது பெங்களூரு தனியார் மருத்துவமனை.

பெங்களூரு: ஒருங்கிணைந்த நாடுகளின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோசப் டிசோசா. இவர் தனது 6 வயது முதலே கிட்டாரை இசைக்கக் கற்றுக் கொண்டு உள்ளார். பின்னர், 2004ஆம் ஆண்டு முதல் தெருக்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாசிக்கத் தொடங்கி உள்ளார்.

பின்னர், 2008ஆம் ஆண்டு முதல், இவரது கிட்டார் இசைக்கு தனியான ரசிகர்கள் கிடைக்கத் தொடங்கினர். இதனால், ஜோசப் தொடர்ந்து கிட்டார் இசைத்து வந்து உள்ளார். இவ்வாறு தனது விரல், அதனை செயல்பட வைக்கும் மூளைக்கு அதிக வேலை கொடுத்து வந்து உள்ளார் ஜோசப் டிசோசா.

இதனால் அவரது மூளை மற்றும் மூளையில் இருந்து கைக்கு செயல்படும் நரம்பில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர் Task-Specific Focal Hand Dystonia (TSFHD) என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இருப்பினும், மனம் தளராத அவர், இதனை எப்படியாவது சரிசெய்து விட வேண்டும் என அதற்கான மருத்துவத்தை தேடி உள்ளார்.

BANGALORE JAIN HOSPITAL

இதன் பேரில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பகவான் மகாவீர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர், அவருக்கு மருத்துவர்கள் சரண் ஸ்ரீனிவாசன் மற்றும் சஞ்சீவ் சிசி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக உடன் கூட்டணியா? தவெக மறுப்பு.. அப்போ அடுத்தது என்ன?

அப்போது, விரல்களுக்கு மூளையில் இருந்து செல்லும் நரம்பைக் கண்டறிவதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்காமல், கிட்டாரை இசைக்கச் சொல்லி, அந்த அசைவுக்கேற்ப மூளை நரம்பைக் கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்து உள்ளனர். இதன்படி, சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளது.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!