கோவையில் பிரபல தியேட்டருக்கு விசிட் அடித்த FIR படக்குழு : ஓடிடி தளம் குறித்து பெருமையாக பேசிய நடிகர் விஷ்ணு விஷால்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 12:40 pm

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள FIR திரைப்படத்தின் குழுவினர் இயக்குனர் மனு ஆனந்த், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ரெபா மோனிகா ஆகியோர் கோவை தனியார் திரையரங்கிற்கு பார்வையிட வருகை புரிந்து இருந்தனர்.

தொடர்ந்து அங்குள்ள பார்வையாளர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷ்ணு விஷால் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் திரை அரங்கிற்கு வருகை புரிவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த விஷ்ணு விஷால், இந்த படத்தில் மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை எனவும் சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

ஓடிடி திரையரங்குகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது. அதில் பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவது நல்லது தான் எனினும் திரையரங்கிற்கான வரவேற்பு என்றும் குறையாது என தெரிவித்தார்.

என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது வியாபாரம் தான் என தெரிவித்த அவர் அதனை கமர்ஷியலாக இருக்கும் பொழுது சில நெகடிவ் விமர்சனங்கள் வருவது இயல்புதான் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1647

    0

    0