தனிமையில் சந்திக்க அழைத்தேனா? மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஜெயலட்சுமி – சினேகன் விவகாரம்: கொந்தளித்த நடிகை ..!

Author: Vignesh
29 September 2022, 12:32 pm

பாடலாசிரியர் சினேகனுக்கு எதிராக நடிகை ஜெயலட்சுமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியான சினேகன், தான் நடத்தி வருகிற சினேகம் என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும், பாஜக பிரமுகரான ஜெயலட்சுமி மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் சினேகன் புகார் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில் சினேகனின் குற்றச்சாட்டை மறுத்த ஜெயலட்சுமி, சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் ஒன்றையும் அளித்திருந்தார். இதனையடுத்து இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இவ்வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வித ஆதாரமும் இல்லாமல் சினேகன் என்மீது பொய் புகார் அளித்துள்ளதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவர் என்னிடம் பேச வந்தது போது அவரை தனிமையில் காபி சாப்பிட அழைத்தாகவும் கூறியுள்ளார், இதற்காக நீதி வேண்டி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கில் என் மீது பொய் புகார் அளித்த சினேகன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் அடுத்த மாதம் 19 ஆம் தேதிக்குள் பாடலாசிரியர் சினேகன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலட்சுமி கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 470

    0

    0