கோவையில் பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து : துணிக்கடையில் ஏற்பட்ட தீயால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 9:54 am

கோவை எஸ்.எஸ்.குளம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல நேற்று இரவு வியாபாரத்தை முடித்த ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று உள்ளனர். அதனையடுத்து சிறிது நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு நேரம் என்பதாலும் அருகில் உள்ள கடைகளும் பூட்டியிருந்ததாலும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 639

    0

    0