டயர் வெடித்து தனியார் பேருந்தில் திடீரென பிடித்த தீ.. அலறி அடித்து ஓடிய பயணிகள்..!

Author: Vignesh
23 August 2024, 11:30 am

திருநெல்வேலியில் இருந்து செந்தூர் வேலன் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி சென்றுள்ளது.

27 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்ற இந்த தனியார் பேருந்து, திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்த போது திடீரென டயர் வெடித்து தீப்பிடித்து எறிய தொடங்கியது.

இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைவரும் உடனடியாக பேருந்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!