ஓடுங்க வேகமா ஓடுங்க.. ஆட்சியர் அலுவலகத்தில் தீவிபத்து : ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்..!

Author: Vignesh
21 ஆகஸ்ட் 2024, 5:36 மணி
Quick Share

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக முத்துக்குமார் என்பவர் எலக்ட்ரிஷன் ஆக பணிபுரிந்து வருகிறார் .அவரது இரண்டு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் அதிகாரிகள், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இன்று மாலை மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போடும் போது திடீரென பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் நிறுத்தியிருந்த TVS XL – வாகனங்களுக்கும் தீப்பற்றியது. மேலும் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து புகை மண்டலமாக மாறியது.

இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுசிப்காட் தீயணைப்பு அதிகாரி பாபநாசம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 தளங்கள் உள்ளன. இதில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எதுவம் அசம்பாவிதங்கள் நடந்தால் எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை கருவி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 326

    0

    0