மினி திரையரங்கில் பயங்கர தீவிபத்து… தியேட்டர் முழுவதும் எரிந்து சாம்பல்… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மக்கள்!!

Author: Babu Lakshmanan
5 July 2022, 11:17 am

சோளிங்கா் சுமதி மினி திரையரங்களில் பயங்கர தீவிபத்து தியரங்கு முழுவதும் எரிந்து சாம்பலாகியது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வாலாஜா சாலையில் சுமதி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கம் பின் பகுதியில் முற்றிலும் குளிா்சாதன வசதியுடன் கூடிய சுமதி மினி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கில் தற்பொழுது யானை திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

நேற்று இரவு வழக்கமாக 12.30 மணிக்கு இரவு காட்சி முடிந்து அனைவவரும் வெளியே சென்றதும் ஊழியர்கள் திரையரங்கை சுத்தம் செய்துவிட்டு பூட்டி சென்றுள்ளனா்.

இந்நிலையில் திடீரென திரையரங்கில் தீப்பற்ற துவங்கியுள்ளது. இதை கண்ட இரவு காவலாளி இது குறித்து சோளிங்கா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினா் தீயை அனைக்க போராடி வந்த நிலையில், மளமளவென எரிந்த தீயால் திரையரங்கம் முழுவதும் பரவத் தொடங்கியது.

இதில், தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால், அதற்குள் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீா் தீா்ந்தததால் அரக்கோணத்தில் இருந்து கூடுதலாக மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனா்.

அதிா்ஷ்டவசமாக, திரைப்படம் முடிந்து அனைத்து பார்வையாளர்களும் வெளியேறிய நிலையில், இரவு நேரத்தில் இந்த தீ விபத்து நடந்ததால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 1193

    0

    0