அதிமுக முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு சொந்தமான ஜவுளி கடையில் விடிய விடிய எரிந்த தீ : ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 12:47 pm

திண்டுக்கல் : நத்தம் அருகே கோபால்பட்டியில் ஜவுளி, மற்றும் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோபால்பட்டியில் சந்திரசேகருக்கு ( முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர்) சொந்தமான விஷ்ணு தேவி டெக்ஸ்டைல்ஸ், பாத்திரம் மற்றும் பர்னிச்சர் கடை உள்ளது.

2 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த கடையில் இரவு 1மணி அளவில் தீப்பற்றி புகை வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சி செய்யப்பட்டு வந்த நிலையில் கட்டுக்கடங்காத தீ மேலும் பரவி தொடங்கியதையடுத்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 7மணி நேரத்துக்கு மேலாக தீயணைக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தீவிபத்தால் சுமார் 3 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

இந்த தீ விபத்து குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். சுமார் 7 மணி நேரத்துக்கு மேலாக தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!