வீட்டில் உள்ள Upsல் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து : புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2022, 12:43 pm

கோவை : உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திறனல் ஏற்பட்டு அம்மா மகள்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்து வருபவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர்.

இவரது கணவர் ஜோதி லிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து தீயை அனைத்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் மகளும் அவரது அம்மாவும் படுக்கை அறையில் இன்னொரு பெண்ணும் இறந்து கிடந்துள்ளனர்.இது குறித்து தீயணைப்புத்துறையினர் கூறும்போது வீட்டின் ஹாலில் இருந்த யூ.பி.எஸ்.ல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டுள்ளது.

இதை அனைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு சமையல் அறையில் இருந்த அஞ்சலி மற்றும் அம்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசிதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து தடயறிவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு செய்து வருகின்றனர். இவ்விபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திற்னல் ஏற்பட்டு பலியாகியுள்ளது. தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேத்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…