செய்தி எதிரொலி: வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் நிறுத்தப்பட்ட தீயணைப்பு வாகனம்!!

Author: Rajesh
7 February 2022, 12:45 pm

கோவை : Update news 360 செய்தி எதிரொலியாக கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் தினமும் சேகரமாகும் 800 டன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன.

இங்கு அதிகளவு குப்பைகள் கொட்டப்படுவதால் அவ்வப்போது குப்பைகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து

ஆனால் வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டும் கண்துடைப்புக்காக தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து update news 360 தளத்தில் விரிவான செய்தி பதிவிடப்பட்டது. மேலும், குப்பை கிடங்கு வளாகத்தில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், குப்பைக்கிடங்கு வளாகத்தில் 24 மணி நேரம தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் தீயணைப்பு வீரர்களும் இருப்பார்கள்.

இதன்மூலம் குப்பைக்கிடங்கில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்படும்போது அதனை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1105

    0

    0