#FireAccident.. கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ : நீதி கேட்ட மக்கள் மேலும் அவதி..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 9:56 pm

#FireAccident.. கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ : நீதி கேட்ட மக்கள் மேலும் அவதி..!!

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

குப்பை தரம் பிரித்து அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடமருகே தீ பற்றி இருந்துவருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது இப்போது தெரியவில்லை. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 6 தண்ணீர் லாரிகள் அங்கு தீயணைக்கும் பணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே குப்பைக் கிடங்கால் துர்நாற்றம் ஏற்படுவதால் பல்வேறு தீங்குகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வரும் நிலையில், தற்போது தீ விபத்தால் புகை கிளம்பி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!