தீபாவளிக்குள்ள இன்னும் எத்தனை உயிரை காவு வாங்கப் போகுதோ? தொடரும் பட்டாசு ஆலை விபத்து.. 10 பேர் பலி!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கபாளையம் ஊராட்சியில் கனிஷ்கர் ஃபயர் ஒர்க்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையின் முன்புறம் பட்டாசு கடையும் செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு கடையிலிருந்து வெளியே எடுத்து சேம்பில் பார்த்து வெடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென வெடி வெடித்து கடைக்குள் சிதறியது.
இந்த நிலையில் கடையில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடிக்க ஆரம்பித்தது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டாசு கடையிலிருந்து வெடி தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அழகாபுரியைச் சேர்ந்த பொன்னுத்தாய் (45), செம்பட்டையன்கல் சமத்துவபுரம் சின்னத்தாய்(35) இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் 10 பேர் பலியகியுள்ளனர்.
புதியதாக தயாரித்த வெடியை பரிசோதிக்கும் போது விபத்து என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.